என் எதிரிகளை ஜெயிக்க முடியுமா? என் நிலம் எனக்கு திரும்பக் கிடைக்குமா? கோர்ட் வழக்குகளில் எனக்கு வெற்றி கிடைக்குமா? – எஸ். சண்முகசுந்தரம், கோயம்புத்தூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் சண்முக சுந்தரம் அவர்களே !
47 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி விருச்சிகம், லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகத்தில் குரு 9-ல் இருப்பதால் நீங்கள் விரும்பிய வெற்றி கிடைக்கும். மேலும், சனி 8-ல் இருந்து கொண்டு 5-ம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால், கிடைக்கும் நற்பலன் தள்ளிப் போகாமல் இருக்கவும், வழக்கு வெற்றி மற்றும் நிலம் கிடைக்கவும், சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் காவளம்பாடி இராஜகோபால ஸ்வாமி திருக்கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு வரவும். எதிரிகளை வெல்ல, ஞாயிற்றுக் கிழமை தோறும் காலபைரவர் கோவிலில் விளக்கேற்றி வரவும். எதிரிகளின் தொல்லை தீர்ந்து அமைதியான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
செப்டம்பர் 2009 முதல் நானும் எனது கணவரும் வேலை காரணமாக வேறு வேறு இடங்களில் வசித்து வருகிறோம். நான் வேலை பார்க்கும் ஊரில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவருக்கு இங்கேயே வேலை கிடைக்குமா? அவர் என்னுடன் இணைந்து வாழும் காலம் எப்போது கனியும்? – லட்சுமி, சென்னை.
அன்பு நிலாச்சாரல் வாசகி லக்ஷ்மி அவர்களே !
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் துலாம். தங்களின் ராசிப்படி, மே மாதம் 2010 -ல் கும்பத்திற்கு இடம் மாறும் குரு 7-ம் பார்வையாக தங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்க்கிறார். இந்தக் காலகட்டத்தில் தங்களின் கணவர் உங்கள் குடும்பத்தோடு இணைந்து வாழ்வார். வெள்ளிக்கிழமை தோறும் திருமகளை வழிபட்டு வாருங்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். மகிழ்ச்சியான வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“