ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடலாமா? பணவரவு இன்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனை கூறுங்கள் – ராஜவடிவேலு, சென்னை
அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜவடிவேலு அவர்களே!
42 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம், ராசி மிதுனம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சந்திரன் 12-ம் வீட்டில் உள்ளதால் தாங்கள் திங்கள் கிழமைதோறும் சந்திர பகவானை தரிசனம் செய்து , சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வர, தங்களின் பொருளாதார சுணக்கம் தீரும். செவ்வாய் தங்கள் ஜாதகத்தில் தன் சொந்த வீடான மேஷத்தில் உள்ளதால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். பரிகாரமாக செவ்வாய் கிழமைதோறும் முருகனை வழிபட்டு வரவும். தங்களின் பணக் கஷ்டம் தீர்ந்து வளமான வாழ்வு அமைய நிலாச் சாரல் தங்களை வாழ்த்துகிறது.
திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை. எப்போது குழந்தை பிறக்கும்? – மேகலா, திருநெல்வேலி
அன்பு நிலாச்சாரல் வாசகி மேகலா அவர்களே!
34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகப்படி, ராகு திசை குரு புக்தி நடை பெறுவதால், வெள்ளிக் கிழமைதோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வரவும். அத்துடன் தங்களின் கணவரின் நட்சத்திரமாகிய ரோகிணி வரும் நாளில், கண்ணனை வழிபட்டு வர, 2011 ஜுன் மாதம் இடம் மாறும் ராகு, குழந்தை பாக்யத்தை அளிப்பார். தங்களின் இல்லத்தில் விரைவில் மழலை தவழ, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
என் பிரந்த தெதி 26.04.1975 நெரம் 9.30 அம் இப்பொலுது மிகுந்த சிரமட்தில் இருக்கிரென்… சாவின் விலிம்பில் நிர்கிரென். கடன் அவமன கெட்டபெயர் காதல் யெமாட்ரம் யென எல்லாம் என்னை கொல்கிரது. நான் வால்வதா இல்லை சாவதா? நிரைய ஜொசியரை கலன்தாயிட்ரு. பரிகரஙலும் கொஇல்கலும் இன்னும் பொஐகொன்டெ இருகிரென். ஆனலும் மாட்ரம் இல்லை. எதிரிகல் அனியாயம் செஇபவர் சொந்கியமாஒ இருக்க நன் அவர் கன்முன்னெ கேலெ பொஐ கொன்டிருகிரென். இதர்கு என்ன முடிவு. என் எதிர்கலம்சொல்ல முடிஉம மடம்?
my date of birth is 20:8:1976 time of birth 7:55am star mirugaserisham my husbands date of birth is 14:03:1970 star mirugaserisham CAN WE HAVE THE STATUS TO LIVE IN FOREIGNE WILL MY HUSBAND GET JOB AT FOREINE IF MEANS WHEN
my date of birth is 14:3:1970 time of birth is 10:39 pm my wife date of birth is 20:08:1976 time of birth is 7:55 am CAN I GET JOB AT FOREIGNE IF MEANS WHEN (THANK YOU )