ஜோதிடம் கேளுங்கள்

என் குழந்தையின் எதிர்காலம் பற்றி விளக்கிக் கூறுங்களேன். – அஷினி, மெல்போர்ன்.

அன்பு நிலாச்சாரல் வாசகி அஷினி அவர்களே !

தங்கள் 2 மாத குழந்தையின் நட்சத்திரம் உத்திரம், ராசி, கன்னி. லக்னம் துலாம். ஜாதகியின் ஆயுள் தீர்க்கம். குரு 7-ம் வீட்டில் இருந்து கொண்டு, லாப வீடு எனப்படும் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், நல்ல பொருள் வளம் நிறைந்தவராக இருப்பார். ஜாதகிக்கு சற்றே முன் கோபம் உண்டு. ஊக்கப்படுத்தினால் ஜாதகியின் திறமை தக்க சமயத்தில் வெளிப்படும். ஜாதகியின் எதிர்காலம் வளமாக இருக்கும்.

********

என் எதிர்காலத்தைப் பற்றி சொல்லுங்கள். – செல்வராஜன், சங்ககிரி
 
அன்பு நிலாச்சாரல் வாசகர் செல்வராஜன் அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், லக்னம் கும்பம். மே 2012க்குப் பிறகு, ரிஷப ராசிக்கு இடம் மாறும் குரு, தங்களின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் சனி, குரு ஆகிய இருவரையும் பார்க்கும் காலம் தங்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாங்கள் செவ்வாய்க்கிழமை தோறும், தங்களின் ராசி அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட்டு வரவும். நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துகள் .

*******

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.”

About The Author