ஜோதிடம் கேளுங்கள்

வணக்கம். என்னுடைய எதிர்காலம், கல்வி பற்றி அறிய விரும்புகிறேன். மருத்துவத்துறை எனக்கு உகந்ததா? அதில் என்னால் சாதிக்க இயலுமா? என்னால் உயர் கல்வியைத் தொடர முடியுமா? – வினிதா ராணி, ஜாஃப்னா, இலங்கை

அன்பு நிலாச்சாரல் வாசகி வினிதாராணி அவர்களே!

தங்களுக்கு தற்போது 22 வயது ஆகிறது. தங்களின் நட்சத்திரம் மிருகசிரீடம்; ராசி ரிஷபம்; லக்னம் துலாம் ஆகும். மருத்துவத் துறை தங்களுக்கு உகந்தது. ஜாதகப்படி தற்போது 8-ல் மறைந்துள்ள சந்திரனின் புக்தி 9.8.09 வரை நடைபெறுகிறது. அதுவரை சில தடங்கல்கள் தோன்றி மறைந்தாலும் இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு தாங்கள் உயர்கல்வியைத் தொடர சாதகமான காலம் உள்ளது. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தங்கள் ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பதால், தாங்கள் சாதிக்கப் பிறந்தவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், வெற்றி உங்கள் வசமாகும். வாழ்த்துக்கள்!

******

நான் ஒருவரை காதலிக்கிறேன். என்னுடையது விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். எனக்கு 4 இல் செவ்வாய் தோசம் உள்ளது என்கிறார்கள். அவர் சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். எங்கள் எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும்? – ஆர். தேவி, கும்பகோணம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி தேவி அவர்களே!

22 வயதாகும் தங்களின் லக்னம் கும்பம்; ராசி விருச்சிகம்; நட்சத்திரம் அனுஷம். தங்களின் ஜாதகப்படி காதல் திருமணம் கை கூடும். தங்களின் காதலர் சிம்ம ராசியைச் சேர்ந்தவர் ஆதலால், தன்னுடைய எண்ணங்களில் உறுதியாக இருப்பார். வீண் வாக்குவாதங்கள் வளர இடம் கொடாமலிருந்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்!

******

எனக்குத் திருமணம் நடைபெற்று 2 வருடம் ஆகியிருக்கிறது. நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம். தயவு செய்து எங்கள் இருவரின் ஜாதகம் கணித்துக் கூறவும். என் குழந்தையின் பிறந்த தேதி 20/08/07 – எம்.கிருஷ்ணகுமாரி, பாலக்காடு

அன்பு நிலாச்சாரல் வாசகி கிருஷ்ணகுமாரி அவர்களே!

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தைச் சார்ந்துள்ள தங்களுக்கு தற்போது 25 வயது ஆகிறது. தங்களின் ஜாதகத்தில் 5-ல் உள்ள சனி, 5-ம் வீட்டு அதிபதியான சுக்கிரனைப் பார்ப்பதால், வாழ்க்கையில் கஷ்டங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தங்களின் முயற்சி வெற்றி பெற தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபடுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் திருமகளையும் ஆராதித்து வாருங்கள். உங்களின் கஷ்டங்கள் யாவும் நீங்கி விடும். தங்களின் குழந்தையின் நட்சத்திரம் விசாகம் என்பதால், தெய்வ பலம் தங்களின் முன்னேற்றத்திற்கு துணையாய் இருக்கும். வாழ்த்துக்கள்!

***********************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.”

About The Author

2 Comments

  1. Mohandass

    The book review about this particular race is very nice to read and very good efforts are made to comment about the book. Eventhough we did not have any chance to read the original book, the review of the book helped me to have greater insight.

    Mohandass

Comments are closed.