எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?
– A. ஆனந்த பிரியா, விழுப்புரம்
உங்களுக்கு அரசாங்க உத்தியோகம் அமைவதற்கான அம்சங்கள் ஜாதகத்தில் இருக்கின்றன. உங்களுடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு 10ஆம் அதிபதி லக்னத்திற்கு 10ல் இருப்பதாலும், 10ஆம் அதிபதி அம்சத்தில் உச்சமாவதாலும், சூரியனுக்கு 10ஆம் வீடு குருவால் பார்க்கப்படுவதாலும் இது சாத்தியமாகிறது. 17.4.2009க்குள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. குல தெய்வ வழிபாடு அவசியம் செய்து வரவும். வாழ்த்துக்கள்!
எனக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இப்போது நான் இருக்கும் வேலை எப்படி இருக்கிறது? எனக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைக்குமா அல்லது இங்கேயே இருக்கலாமா?
– ஸ்ரீனிவாசன், ஈரோடு.
உங்களுக்கு வேலையில் மாற்றம் உண்டு. உங்கள் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் இருப்பதால் திடீரென மாற்றம் வரும்; சிறப்பானதாகவும் இருக்கும். 9.12.2009க்குள் வேறு வேலை கிடைக்கும். வாழ்த்துக்கள்!
என் திருமணம் எப்போது நிகழும்? அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுமா? அல்லது என் விருப்பம் போல நிகழுமா?
– கிருத்திகா, கோயம்புத்தூர்.
உங்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நிகழும். அதுவே நிலைக்கும். நல்ல கணவர் அமைவார். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால், அதே போன்ற ஜாதக அமைப்புள்ள வரனைப் பார்த்து முடித்தால் சிறப்பாக இருக்கும். ஜனவரி 2009 முதல் ஜூலை 2009 வரையிலான காலகட்டத்தில் திருமணம் நடக்கும்.
கணிப்பு : கீதா விஸ்வகுமார்
இப்பகுதியில் நிலாச்சாரல் வாசகர்களுக்காக ஜாதகப் பலன்களை கணித்துத் தருகிறார் கீதா விஸ்வகுமார். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு, தற்போது இல்லத்தரசியாக இருக்கும் கீதாவுக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஈடுபாடுஉண்டு. மக்கள் சேவையாற்றும் உன்னத நோக்கோடு அடையாறு இன்னர் வீல் கிளப்பின் தலைவராகவும் தொண்டாற்றுகிறார்.”
I would like all the questioners to report back the result of the predictions by the dates specified by the astrologer if the predictions came true. If the predictions do not come true the astrologer has to put 10 kuttikkaraNams (somersaults) for each failed prediction.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, நான் இப்போது ஒரு புகைப்பட கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கிரேன், நான் ஜாதகம் எப்படி அனுப்புவது?
என் திருமணம் எப்போது நிகழும்?இப்போது நான் இருக்கும் வேலை எப்படி இருக்கிறது?நான் ஜாதகம் எப்படி அனுப்புவது?