செய்த எல்லாத் தொழிலிலும் நஷ்டம், வாழ்விலும் கஷ்டம், குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கிறது. நண்பர்களாலும் ஏமாற்றம் அடைந்து விட்டேன். இனி எப்படி இருக்கும்? – கே. அந்தோணிராஜ், கோயம்புத்தூர்
அன்பு நிலாச்சாரல் வாசகர் அந்தோணிராஜ் அவர்களே!
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் கும்பம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் 5-ம் வீட்டில் உள்ள குருவை கோசார குரு டிசம்பர் மாதம் நோக்கும் காலம் நல்ல வளத்தைக் கொண்டு வரும். எல்லா விஷயத்திலும் மற்றவரை முழுமையாக நம்பாமல், விழிப்புடன் செயல்படவும். கும்ப லக்னத்தைச் சேர்ந்த உங்களுக்கு தைரியம்தான் மிகப் பெரிய சொத்து. எனவே, உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். மனக்குறை தீர, "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே" என்ற பாடலை சொல்லி வாருங்கள். வருங்கால வாழ்க்கை நன்றாக அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
என் எதிர்காலம் எப்படி இருக்கும்? எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்? மிகுந்த மனக் கஷ்டத்தில் இருக்கிறேன் – கே.நிர்மலா, மதுரை
அன்பு நிலாச்சாரல் வாசகி நிர்மலா அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம் ராசி விருச்சிகம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில் 5-ம் வீட்டு அதிபதியான சனியை, டிசம்பர் மாதம் முதல் கோசார குரு பார்க்கும் காலம் புத்திர பாக்கியம் கிட்டும். குழந்தைப்பேறு உண்டாக, தினமும் இல்லத்தில் அபிராமி அம்மன் படம் முன்பு தீபம் ஏற்றி வைத்து, “தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடிச் செங்ககைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே" என்ற பாடலைப் படித்து வரவும். விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“