ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? சி. ஏ படிக்க இருக்கிறேன், என் விருப்பம் நிறைவேறுமா? – ராமகிருஷ்ணன், சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராமகிருஷ்ணன் அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் சிம்மம். மே 2012 வரை குரு பாக்ய வீடு என்று அழைக்கப்படும் 9-ம் வீட்டில் உள்ளார். எனவே இந்த காலகட்டத்திற்குள் திருமணம் கைக்கூடி விடும். தங்கள் ஜாதகத்தில், புதன் சொந்த வீட்டில் உள்ளதால், நீங்கள் விரும்பிய படிப்பை நல்ல விதமாக முடிக்க முடியும். சிறப்பான வாழ்க்கையும், நல்ல கல்விச் செல்வமும் பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

என்னுடைய எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து தகவல் வேண்டும். – பாலமுருகன், பட்டுக்கோட்டை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் பாலமுருகன் அவர்களே !

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம், மேஷம். சிம்ம ராசியை சேர்ந்த தங்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டதால், இனி எதிர்காலம் வளமாக இருக்கும். தங்களின் லக்னத்திலிருந்து, 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு மே 2012 இடம் மாறும் குரு பகவான், ஓராண்டிற்குள் திருமண பாக்கியத்தை அளிப்பார். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author