ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? – ஆர். ரமேஷ், திண்டுக்கல்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரமேஷ் அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் துலாம். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது ராகு திசை சனி புக்தி, 11-04-2012 வரை நடைபெறுகிற்து. வாரம் தோறும் வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டு வரவும். ஆங்கிலப் புத்தாண்டுக்குள் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

                                                                       
                                                                                   *********

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? – ராஜேஸ்வரி, மலேசியா.
அன்பு நிலாச்சாரல் வாசகி ராஜேஸ்வரி அவர்களே !

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம், ராசி ரிஷபம், லக்னம் மேஷம். தங்களின் ஜாதகத்தில், செவ்வாய் 8-ல் உள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வாருங்கள். தற்பொழுது நடைபெறும் ராகு திசை சந்திர புக்தி 07.12.2011 முடிவடைந்து, இதற்குப் பின், செவ்வாய் புக்தி ஆரம்பம் ஆகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்குள் தங்களின் திருமணம் கைக்கூடி விடும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                                                  *********

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A. சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author