நான் தற்போது வேலையில் இருந்தாலும் இதில் எனக்கு முழுதிருப்தி இல்லை. சில சமயங்களில் ஏதோ குழப்பமான மனநிலையும் இருக்கிறது. என் எதிர்கால முன்னேற்றத்திற்கும், பதவி உயர்வுக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறவும், நன்றி. – கே. கார்த்திக், பஞ்சாப்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கார்த்திக் அவர்களே !
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி துலாம், லக்னம் மிதுனம். தாங்கள் மிதுன லகனத்தைச் சேர்ந்தவராதலால், சில நேரங்களில் தெளிவான முடிவெடுக்க இயலாமல் போவதுண்டு. "இதமுடன் வாழ இன்னல்கள் நீக்கு, புத பகவானே பொன்னடி போற்றி, பதந் தந்தாள் வாய்ப்பன் னொலியோனே! உதவியேமருளும் உத்தமா போற்றி!" என்ற புத்திக்கு அதிபனான புதன் துதியை சொல்லி வரவும், எதிர்காலம் வளமாக இருக்கும். அத்துடன் வேலையில் உயர்வான நிலையைப் பெற, தங்கள் நட்சத்திர அதிபனான செவ்வாய்க்கு சிறப்பான ஆராதனை செய்து வரவும். உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச் சாரல் வாழ்த்துகிறது.
பத்து வருடங்களாக வீட்டில் இருக்கிறான். வேலைக்கு போவானா? அல்லது சன்யாச யோகம் உள்ளதா?
– எஸ். ஸ்ரீனிவாஸ், செகந்திராபாத்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் ஸ்ரீனிவாசன் அவர்களே !
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்ராடம், ராசி தனுசு லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது ராகு திசை குரு புக்தி, 02.01-2012 வரை நடைபெறுகிற்து. இதற்குள் நல்ல மாற்றம் ஏற்பட்டு, ஜாதகர் பணியில் அமர்வார். தாங்கள் குறிப்பிடும் யோகம் இல்லை. உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A.
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“