எனக்கு தற்பொழுது அஷ்டம சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? – த. செந்தில், தஞ்சாவூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் செந்தில் அவர்களே !
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் கன்னி. தங்களின் ராசிப்படி நடை பெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதற்குப் பின் தங்களுக்கு நிரந்தரமான நல்ல பணி கிடைக்கும். முதலில் உள்நாட்டில் கிடைக்கும் வேலையில் அமருங்கள். பிறகு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு திருமணம் நடக்க தாமதமாகிறது. இந்த தடை நீங்க என்ன செய்ய வேண்டும் ? எனக்கு திருமணம் எப்போது நடக்கும் ? – எம். பாண்டியம்மாள், தேவாரம்.
அன்பு நிலாச்சாரல் வாசகி பாண்டியம்மாள் அவர்களே !
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி. லக்னம் சிம்மம். தங்களின் ஜாதகத்தில், 5-ல் உள்ள குருவை கோசார ரீதியாக மேஷத்தில் உள்ள குரு, பார்ப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களின் திருமணம் கை கூடிவிடும். வெள்ளிக்கிழமை தோறும் அன்னை அபிராமியை வழிபட்டு, அபிராமி அந்தாதியில் "அதிசயமான வடிவுடையாள் எனத் துவங்கும் 17வது பாடலை நம்பிக்கையுடன் படித்து வாருங்கள். சிறப்பான திருமண வாழ்க்கை அமைய நிலாச் சாரல் தங்களை வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“