எனக்கு பெற்றோர் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரப்போகிறவர் எப்படி இருப்பார்? அவருடைய கல்வி, குணாதிசயங்கள் பற்றுக் கூறுங்களேன். நன்றி! – இ.கிருஷ்ணவேணி, கும்பகோணம்
அன்பு நிலாச்சாரல் வாசகி கிருஷ்ணவேணி அவர்களே!
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் கும்பம் ஆகும். தங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் பொறியியல்/ஆசிரியப் பணியில் உள்ளவராக இருப்பார். அவர் சிறந்த கலாரசிகராக இருப்பதோடு, நல்ல கல்வித் தகுதியும் உடையவராகவும் இருப்பார். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
நான் பெரிய கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? தெரிந்தவர் வேலை கிடைக்க முயற்சி பண்ணலாம் என்கிறார். பணம் கொடுத்து முயற்சி செய்யலாமா? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? – பிரேமா, தஞ்சாவூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகி பிரேமா அவர்களே!
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி, லக்னம் தனுசு ஆகும். தங்களுக்கு அரசு அல்லது அரசின் உதவி பெறும் நிறுவனங்களில், தகுதியின் அடிப்படையில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 5-ம் வீட்டில் சுக்ரன் இருப்பதால், தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். வளமான வாழ்க்கை கிடைக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
கடந்த மூன்று வருடங்களில், நான் இருமுறை வேலையை இழந்து விட்டேன். எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும். தற்போது கனடாவில் வசித்து வருகிறேன். – எம். வசந்தன், ஸ்ரீலங்கா.
அன்பு நிலாச்சாரல் வாசகர் வசந்தன் அவர்களே!
34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி மீனம், லக்னம் கும்பம் ஆகும். இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மனந்தளராமல் முயற்சி செய்யவும். நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அயல்நாடு செல்லும் வாய்ப்புண்டா? என்னால் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியுமா? – சஞ்சய், தேனி
அன்பு நிலாச்சாரல் வாசகர் சஞ்சய் அவர்களே!
34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் கும்பம் ஆகும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சி மூலம், குரு தங்கள் லக்னத்தில் அமரப் போவதால், திருமணம் மற்றும் வெளிநாடு செல்லுதல் ஆகிய இரண்டும் டிசம்பருக்குப் பின் நடைபெறும். ஜோதிடம் தங்களால் கற்றுக் கொள்ள முடியும். தங்களின் விருப்பங்கள் நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“