எனக்கு சுக்ர திசை எப்போது ஆரம்பம்? அதன் பலன்கள் பற்றிக் கூற முடியுமா? – ஆர். கண்ணன், சேலம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கண்ணன் அவர்களே !
42 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி கடகம், லக்னம் கும்பம் ஆகும். தங்களின் லக்னப்படி சுக்ரன் சுப கிரகமாகும். எனவே சுக்ர திசை தங்களுக்கு நல்ல வளத்தையும், உயர்வையும் நல்கும். தங்களின் ஜாதகப்படி, 18.07.2012 முதல் சுக்ர திசை ஆரம்பம் ஆகிறது. தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
************
என் குடும்பத்தில் கடன் தொல்லையும், பல பிரச்னைகளும் உள்ளது. இவை தீர என்ன செய்ய வேண்டும்? –
எம். பரணி ராஜாராவ், ஸ்ரீ காளஹஸ்தி.
அன்பு நிலாச்சாரல் வாசகர் பரணி ராஜா ராவ் அவர்களே !
41 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் மீனம். தங்களின் ஜாதகத்தில் குரு 8-ல் மறைந்துள்ளார். எனவே வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு உரிய முல்லை மலரால் வழிபட்டு, நெய் தீபம் ஏற்றி வரவும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் தீர்ந்து விடும். உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது.
***********
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
<https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp>
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.“