ஜோதிடம் கேளுங்கள்

என் மகன் நந்தனின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என் கணவருக்கு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? குடும்ப வாழ்வு எப்படி இருக்கும்? ஒரு வாசகி, மதுரை.

அன்பு நிலாச்சாரல் வாசகி அவர்களே !

2 வயதாகும் தங்களின் மகன் நந்தனின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், மற்றும் அவர் லக்னமும் விருச்சிகம் ஆகும். எதிலும் நிதானமாக செயல்படும் குணமுள்ள இவர் நன்கு படிப்பார். தாயார், தந்தை இருவரும் நன்றாக இருப்பார்கள். தந்தைக்கு தனியார் துறையில் வேலை, இன்னும் ஆறு மாதத்திற்குள் கிடைத்து விடும். நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துகள்.

******

வணக்கம். நான் மும்பையில் வசிக்கிறேன். இங்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு சொந்தமாக தொழில் செய்ய ஆசை. ஆனால் அதற்கு சரியான பண வசதி இல்லை. நான் தொழில் (ட்ரேடிங்) தொடங்குவேனா? எப்போது? – கல்யாண சுந்தரராமன், முத்துப்பேட்டை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கல்யாணசுந்தரம் அவர்களே!

42 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் விருச்சிகம் ஆகும். நேரடியாக வியாபாரத்தில் ஈடுபடாமல், அதனை மேற்பார்வை பார்க்கும் பணியில் ஈடுபட்டால், நல்ல பொருள் வரவு உண்டு. வளம் பல பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.

******

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.”

About The Author

1 Comment

Comments are closed.