எனக்கு திருமண வாழ்க்கை சரியில்லை. நான் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளேன். கடன் நிறைய உள்ளது. எனக்கு அரசு வேலை கிடைக்குமா? என் நிலை சரியாகுமா? – பிரேமலதா, பரமக்குடி
அன்பு நிலாச்சாரல் வாசகி பிரேமலதா அவர்களே!
37 வயதாகும் தங்களின் லக்னம் மற்றும் ராசி கன்னி, நட்சத்திரம் உத்திரம் ஆகும். தங்களின் ஜாதகப்படி அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. கடன் தொல்லை தீருவதற்கும் , உங்கள் நிலைமை சரியாவதற்கும், வீட்டின் அருகில் உள்ள பெண் தெய்வத்தின் சந்நிதியில் தீபம் ஏற்றி வரவும். மேலும், பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு வாருங்கள். வாழ்வு நிலை சீர் பெறும்.
எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும். நல்ல வாழ்க்கையாக அமையுமா? அவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? – சண்முகப்ரியா (அ) புனிதா, சென்னை
அன்பு நிலாச்சாரல் வாசகி சண்முகப்ரியாஅவர்களே!
20 வயதாகும் தங்களின் ராசி கன்னி, நட்சத்திரம் ஹஸ்தம், லக்னம் சிம்மம் ஆகும். தங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும். உங்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தை 5ல் உள்ள சனியும், 5க்கு உரிய குருவும் பார்ப்பதால், தங்களின் வாழ்க்கைத் துணைவர் சிறந்த வழிகாட்டியாகவும், அன்புடையவராகவும் இருப்பார். திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடும் விதத்தில் கிரக அமைப்புகள் உள்ளன.
துபாயில் மெக்கானிக்கல் டெக்னீஷியன் ஆக பணியாற்றி வரும் எனக்கு இந்தியாவிலேயே சொந்தத் தொழில் பார்க்கும் யோகம் இருக்கிறதா? எனக்கு சரியான துறை எது?
– நாகராஜன், கடலூர்
அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. நாகராஜன் அவர்களே!
31 வயதாகும் தங்களின் ராசி மீனம், நட்சத்திரம் உத்திரட்டாதி, லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, பணியில் இருந்து நல்ல நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன. எனவே, பணிக்குத் துணை புரியும் துறைகளில் தங்களின் கவனத்தை செலுத்தி வர, நல்ல முன்னேற்றம் அடையலாம்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“