எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? இந்த ஐம்பது வருட வாழ்க்கையில் பெரும்பகுதி மன உளைச்சலாகவே இருந்து வந்துள்ளது. உயர்படிப்பு படித்திருந்தாலும் வேலையும் இல்லை. – வெண்மா, சென்னை.
அன்புள்ள நிலாச்சரல் வாசகர் வெண்மா அவர்களே!
50 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் செவ்வாய், குரு இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது நல்ல அமைப்பு. தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். மனதைத் தளரவிடாமல், தங்களின் திறமைமீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். வெற்றி உங்கள் வசமாகும்.
*****
எங்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகி விட்டாலும் இன்னும் குழந்தை இல்லை. எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும்? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? – சுமங்கலி, குப்பிலன், ஸ்ரீலங்கா.
அன்புள்ள நிலச்சாரல் வாசகி சுமங்கலி அவர்களே!
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் ராசியிலிருந்தும், தங்களின் கணவரின் ராசியான மீனத்திலிருந்து குரு டிசம்பர் 2009 வரை நல்ல இடத்தில் இருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் கிட்டும். வியாழன் தோறும் புத்திரக்காரகரான குரு பகவானை வழிபட்டு வரவும். அபிராமி அந்தாதியில் உள்ள 65வது பாடலைப் படித்து வாருங்கள். விரைவில் புத்திரச் செல்வம் கிட்ட, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
எனக்கு கல்யாணம் முடிந்து 4 வயதில் பையன் உள்ளான். என்னுடைய கணவருக்கு நல்ல வேலை இல்லை. எங்களுடைய எதிர்காலம் எப்படி உள்ளது என்று தயவு செய்து சொல்லுங்கள். – திருமதி. ஆறுமுகம், மதுரை.
அன்புள்ள நிலாச்சாரல் வாசகி திருமதி ஆறுமுகம் அவர்களே!
27 வயதாகும் திரு ஆறுமுகம் அவர்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் ரிஷபம் ஆகும். கோசார குரு வளம் தரும் 9-ம் இடத்தில் உள்ளார். இருவரின் எதிர்காலம் நன்றாக உள்ளது. செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“