ஜோதிடம் கேளுங்கள்

என் வாழ்க்கையில் வெற்றி பெற, கடன் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும்? என் காதல் திருமணத்திற்கு என் பெற்றோர் சம்மதிக்க என்ன செய்ய வேண்டும்? – பி. சுந்தர்ராஜன், கீரப்பாளையம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சுந்தர ராஜன் அவர்களே !

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் மிதுனமஆகும். கடன் தொல்லை இன்றி வாழ, பிரதோஷம் வரும் நாளில் சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு வரவும். தங்களின் ஜாதகத்தில் 5-ல் இருக்கும் சனி, காதலைக் குறிக்கும் கிரகமான சுக்ரனை 7-ம் பார்வையாகப் பார்ப்பதால், பொறுமையாக இருப்பதோடு, வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரனை வழிபட்டு வர, காதல் திருமணம் பெற்றோரின் ஆசியோடு கைகூடும். தங்களுக்கு வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள் .

******************

நான் என் சொந்த வீட்டில் வசிக்க என்ன செய்ய வேண்டும்? வாழ்வில் நிம்மதியும், அமைதியும் பெற தயவு செய்து வழி சொல்லுங்கள். – உஷாராணி, பெங்களூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி உஷா ராணி அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லகனம் சிம்மம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் செவ்வாய் 12-ல் இருப்பதால், சொந்த வீட்டில் இருக்க, செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் பகவானை வழிபட்டு வரவும். தாங்கள் சிம்ம லக்னத்தை சேர்ந்தவராதலால், தங்களின் பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டு, திறமையாக செயல்பட்டு வர, வாழ்வில் வெற்றி பெறலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய பகவானை வலம் வர, வாழ்வில் வளம் பல சேரும்.  தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், 
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author