ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு மூன்று மாத காலமாக வேலை இல்லை. எப்போது நல்ல வேலை கிடைக்கும்? என் ஜாதகப்படி சொந்தத் தொழில் செய்யலாமா? – விஜயலக்ஷமி, கும்பகோணம்.

அன்புள்ள நிலாச்சாரல் வாசகி விஜயலக்ஷ்மி அவர்களே!
58 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் மிதுனம் ஆகும். தற்பொழுது தங்களின் ராசியிலும், தங்களின் லக்னத்திலிருந்து 8-ம் இடத்திலும் இருக்கும் குரு மே மாதம் முதல், தங்களின் ராசியிலிருந்து 2-ம் இடத்திற்கும், லக்னத்திலிருந்து 9-ம் இடத்திற்கும் செல்வதால், தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தங்களின் ஜாதகப்படி வேலைக்கு செல்லும் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. மீண்டும் உங்களுக்கு வேலை கிடைக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

****

கடந்த 4 வருடமாக, நான் எனது கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். அவர் கனடாவில் இருக்கிறார். நான் கனடா செல்வேனா? எனது எதிர்காலம் எப்படி? – ஷண்முகப்ரியா, ஜாஃப்னா

அன்புள்ள நிலாச்சாரல் வாசகி ஷண்முகபிரியா அவர்களே!
42 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீடம், ராசி மிதுனம், லக்னம் சிம்மம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்து கொண்டு 5, 7, 9 -ம் வீடுகளைப் பார்ப்பதால், தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். கோசார குரு, மே மாதம் 7-ம் இடத்திற்கு வந்து, தங்களின் லக்னத்திலிருந்து11ம் வீடு மற்றும் தங்களின் லக்னத்தைப் பார்ப்பதால், மீண்டும் தங்களின் கணவரைக் காண கனடா செல்வீர்கள். அபிராமி அந்தாதியில் உள்ள 2வது பாடலைப் படித்து வாருங்கள். தங்களின் வாழ்வில் மீண்டும் சந்தோஷம் மலரும்.

****

என் குழந்தையின் பெயர் விக்டோரியன் மரியா. அவள் நன்றாகப் படிப்பாளா? அவள் நன்றாகப் படித்து, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அவள் ஜாதகம் எப்படி உள்ளது என்று சொல்லவும்? – மைதிலி, ஆண்டோர் என்கொர்டனி, ஐரோப்பா

அன்புள்ள நிலாச்சாரல் வாசகி மைதிலி அவர்களே!
10 வயதாகும் தங்களின் மகளின் நட்சத்திரம் சதயம்,ராசி கும்பம், லக்னம் துலாம் ஆகும். நுண்கலைகளில் ஆர்வம் உள்ள தங்கள் மகளின் ஜாதகத்தில் புதன் 10-ல் நன்றாக உள்ளதால், நல்ல கல்வி உண்டு. அவளின் ஆரோக்கியமும், எதிர்காலமும் நன்றாக இருக்கும்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author