ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? அத்துடன் தொழில், கல்வி மற்றும் திருமணம் பற்றிய எதிர்காலத்தை அறியத் தரவும்.. – அபிமன்யு, மட்டகளப்பு, இலங்கை

அன்பு நிலாச்சாரல் வாசகர் அபிமன்யு அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம் , லக்னம் மிதுனம் ஆகும்.தங்களின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்து கொண்டு 5,7,9 வீடுகளைப் பார்ப்பதால் எதிர்காலம் நன்றாக இருப்பதோடு திருமணம் டிசம்பர் 2009குப் பிறகு கை கூடிவிடும். தாங்கள் மிதுன லக்னத்தைச் சேர்ந்தவராதலால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் வந்து போக இடம் கொடுக்க வேண்டாம். மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள ஆன்மிகம் கை கொடுக்கும். வளமான வாழ்க்கை பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

தொழில் அல்லது வேலை ரீதியாக என்னென்ன யோகங்கள் இருக்கின்றன? – என்.எஸ்.நாதன், ஸ்ரீலங்கா.

அன்பு நிலாச்சாரல் வாசகர் நாதன் அவர்களே!
47 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம் , லக்னம் மகரம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சனி கேந்திரத்தில் வலுவான நிலையில் உள்ளார். குரு சந்திரனைப் பார்ப்பதும் நல்ல அமைப்பு. தங்களின் தொழில் வளம் நன்றாக இருக்கும். டிசம்பர் 2009 முதல் குரு தங்களின் ராசியிலிருந்து வளம் பல நல்கும் 7-ம் இடத்திற்குச் செல்கிறார். வளமான வாழ்கை பெற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமா அல்லது காதல் திருமணமா? – திவ்யா, ஊட்டி.

அன்பு நிலாச்சாரல் வாசகி திவ்யா அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் உள்ள குருவோடு கோசார குரு டிசம்பர் மாதம் முதல் இணைவதால், தங்களுக்கு திருமணம் 2010 ஜூலைக்குள் கை கூடிவிடும். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தங்களுக்கு சிறப்பான வாழ்வை கொடுக்கும். விரைவில் திருமண பாக்கியம் பெற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

Comments are closed.