எனக்கு வேலை எப்போது கிடைக்கும்? என் மகன் கல்வி நிலை எப்படி இருக்கும்? நாங்கள் எங்கு நிரந்தரமாக குடி பெயர்வோம்? என் சகோதரியின் வாழ்க்கை எப்போது நல்லபடியாக மாறும்? – காமாட்சி, தூத்துக்குடி.
அன்பு நிலாச்சாரல் வாசகி காமாட்சி அவர்களே!
33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி மீனம், லக்னம் மிதுனம். வளங்களை அள்ளித் தரும் குரு பகவான் தங்களின் ராசியிலிருந்து 2-ம் இடத்தில் மே 2012 வரை இருக்கிறார். அவரே தங்களின் நட்சத்திர அதிபதியும் ஆவார். தாங்கள் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும். இந்தக் காலக் கட்டத்திற்குள் தங்களுக்கு வேலை கிடைக்கும். சற்றே கூடுதல் கவனமும், ஊக்கமும் கொடுக்க மகனின் கல்வி நன்றாக இருக்கும். தாங்கள் தங்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே குடி பெயரும் வாய்ப்பு உள்ளது. சகோதரியின் வாழ்க்கை நன்றாக இருக்க, செவ்வாய் பகவானை வழிபட்டு வர, மே 2012க்குள் அவர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு ஒரு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? அரசாங்க வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? – எம். கோபால கிருஷ்ணன், சேலம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கோபால கிருஷ்ணன் அவர்களே !
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் கன்னி. தங்களின் ஜாதகப்படி தற்பொழுது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சனி திசை சந்திர புக்தி, 19.04.2012 முடிவடைகிறது. இத்ற்குப் பின் வரும் காலம் வளத்தையும், தனியார் துறையில் நல்ல வேலையையும் அளிக்கும். 3-ல் இருக்கும் குரு, 5-ம் பார்வையாக தங்களின் 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடம் ஆகியவற்றை நோக்குவதால், திருமண வாழ்வு நன்றாக இருக்கும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.“