ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? எனக்குத் திருமண வாழ்க்கை எப்படி அமையும்? என்னுடைய வருங்காலக் கணவரைப் பற்றிச் சொல்லமுடியுமா? – திவ்யதர்ஷினி, கோட்டகலா, இலங்கை.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி திவ்யதர்ஷினி அவர்களே!

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் துலாம். தற்போது குரு, தங்களின் லக்னத்திலிருந்து 9-ஆம் இடத்தில் உள்ளார். அங்கு மே 2014 வரை இருப்பார். இந்தக் காலக் கட்டத்திற்குள் தங்களுக்கு நிரந்தர வேலை கிட்டும். தங்கள் ஜாதகத்தில் குரு, லக்னத்திலிருந்து 5-ஆம் இடத்தில் இருப்பதால், தங்களின் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களுக்குக் கணவராக வரக் கூடியவர் நல்ல கல்விமானாகவும், நல்ல வேலையில் உள்ளவராகவும் இருப்பார். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.

தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.

மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author