ஜோதிடம் கேளுங்கள்

நான் கடந்த இரு வருடங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்று வரைக்கும் பிடித்த வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைப்பதற்கென்று ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? – தயாளினி, பாய்ண்ட்பெட்ரோ

அன்பு நிலாச்சாரல் வாசகி தயாளினி அவர்களே!
22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகப்படி கோசார குரு டிசம்பர் மாதம் தங்களின் 11-ம் வீட்டுக்கு வரும் காலம் தாங்கள் விரும்பியவாறு நல்ல வேலை கிடைக்கும். செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வருவதோடு "சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள் செவ்வாய் மலரடி போற்றி! – அங்காரகனே அவதிகள் நீக்கு" என்ற துதியை தினமும் சொல்லி வரவும். தங்களுக்கு விருப்பமான வேலை கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எனது ராசி மகரம், நட்சத்திரம் அவிட்டம். நான் ஒருவரை 3 வருடமாக காதலித்து வருகின்றேன். அவர் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். எங்கள் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். – எஸ்.சிவநேசமணி, காட்டுமன்னார்கோவில்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சிவநேசமணி அவர்களே!
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி மகரம், லக்னம் கன்னி ஆகும். இரண்டு பெயரின் ராசி அதிபதிகளும் நட்பு நிலையில் உள்ளனர். மண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பதால் வீண் வாக்குவாதம், காரசாரமாகப் பேசுதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம். தங்கள் மனம் போல் வாழ்க்கை அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

47 வயதாகும் எனக்கு எப்போது அரசு ஆசிரியர் பணி கிடைக்கும்? தற்போது தனியாரில் ஆசிரியராக பணி செய்து வருகிறேன். – டி.கே.ஷீலா பிரேமகுமாரி, குடியாத்தம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி ஷீலா பிரேம குமாரிஅவர்களே!
47 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில் புதன், சூரியன் இருவரும் லக்னத்தில் வலுவாக இருப்பதால், தங்களின் கணித புலமை கொண்டு பிள்ளைகளுக்கு நன்கு வழிகாட்டலாம். தங்களின் ஜாதகப்படி பயிலகம் (coaching centre) நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*******************************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. lakshmi.M

    என்னுடைய ராசி மகரம்>, நட்சத்திரம் அவிட்டம், என்னுடைய பிறந்த நாள் 10.3.1985 என்னுடைய வருடபலன் செொல்லவும்

Comments are closed.