எனக்கு மூல நட்சத்திரம், தனுசு ராசி. என் திருமண வாழ்க்கை, கணவரின் குணங்கள் பற்றிச் சொல்லவும்.
– ஆர். எம். சங்கர பாண்டியம்மாள், சாத்தூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகி சங்கர பாண்டியம்மாள் அவர்களே !
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு . லக்னம் மகரம். தங்களின் ஜாதகத்தில் ராகு 5-லும், கேது 11-ம் வீட்டிலும் உள்ளதால், தாங்கள் வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வாருங்கள். தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். வருகின்ற வாழ்க்கைக்த் துணைவர் தங்களுக்கு அறிமுகம் ஆனவராக இருப்பார். சுக்ரன் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்களின் வாழ்க்கைத் துணைவர் தங்கள் மேல் அன்பைப் பொழிபவராக இருப்பார். தங்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
என் குடும்பத்தார் எப்போது மேன்மை அடைவர்? சொந்தத் தொழில் செய்யலாமா? எந்தத் தொழிலில் சீரான வருமானம் வரும்? நன்றி! – எஸ். சிவக்குமார், விழுப்புரம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் சிவகுமார் அவர்களே !
54 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம் ஆகும். டிசம்பர் மாதத்தோடு, அஷ்டம சனி என்கிற நிலை மாறுவதால், தங்களின் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களின் நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தங்களின் நட்சத்திரம் குருவின் சாரம் பெற்றிருப்பதால், ஆன்மீகம் சார்ந்த பூஜைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை விற்றால் லாபம் கிடைக்கும். ஞாயிற்றுக் கிழமை தோறும் பைரவருக்கு அரளிப் பூவால், அர்ச்சனை செய்து வாருங்கள். நிரந்தர வருமானம் வரும் நிலை தானே உருவாகும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“