திருமணம் எப்போது நடக்கும்? வரன் எந்த திசையில் அமையும் என்று கூறவும். – நிவேதிதா, திருச்சி.
அன்பு நிலாச்சாரல் வாசகி நிவேதிதா அவர்களே!
22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம் லக்னம் மகரம். திருமண வாழ்வை அள்ளித் தரும் குரு பகவான் தங்களின் ராசியிலிருந்து 7-ம் இடத்திற்கு மே 2012 முதல் மாறுகிறார். இதற்குப் பிறகு தங்களின் திருமணம் கை கூடிவிடும். வருகின்ற வரன் மேற்கு மற்றும் வட மேற்கு திசையிலிருந்து அமையும். தங்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு விருச்சிக ராசி. எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்? – எம். வினோத், கடலூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் வினோத் அவர்களே !
தாங்கள் கொடுத்துள்ள தேதி மற்றும் நேரப்படி தங்களின் ராசி விருச்சிகமாக வர வில்லை. தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மமாகவும், லக்னம் மகரமாகவும் வருகிறது. தங்களின் ராசியிலிருந்து கோசார குரு, 9-ம் இடத்தில் மே மாதம் 2012 வரை சஞ்சரிப்பார். இந்தக் காலக் கட்டத்திற்குள் திருமணம் கை கூடிவிடும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A. சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“