ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வேலை எப்போது நிரந்தரம் ஆகும்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? – சக்திவேல், பொள்ளாச்சி

அன்பு நிலாச்சாரல் வாசகர் சக்தி வேல் அவர்களே !

22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி கும்பம், லக்னம் சிம்மம். தங்களின் ஜாதகப்படி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குரு திசை சனி புக்தி, 06.07.2012 உடன் முடிவடைகிறது. இதற்குப் பின் வரும் காலத்தில் தங்களின் வேலை நிரந்தரமாகும். தங்களின் லக்னத்தில் கேது, 7-ல் ராகு இருப்பதால், வெள்ளிக்கிழமை நாக தெய்வத்தை வழிபட்டு வரவும். தங்களின் ஜாதகப்படி 5-ம் வீட்டு அதிபதியான குரு, 11ம் வீட்டில் இருந்து கொண்டு தங்களின் 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடம் ஆகியவற்றை நோக்குவதால், திருமண வாழ்வு நன்றாக இருக்கும். உங்களுக்கு வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

எனக்கு திருமண வாழ்வில் நிம்மதியில்லை. எனக்கு குழந்தைப்பாக்கியம் உண்டா? மனம் நிம்மதி அடைய என்ன செய்ய வேண்டும்? – பரிமளா, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி பரிமளா அவர்களே !

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு லக்னம் தனுசு. தங்களின் ஜாதகப்படி, ராசி மற்றும் லக்ன அதிபதியாக குரு இருப்பதால், வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும். வாழ்வில் நிம்மதியும் மற்றும் தாங்கள் விரும்பும் குழந்தை பாக்கியமும் விரைவில் கிட்டும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
<https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp>

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author