நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நான் ஒரு பெண்ணை மிகவும் விரும்புகிறேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என்னுடைய திருமண வாழ்வு எப்படி இருக்கும்? – மகாதேவன், பில்லர், ஆந்திர பிரதேசம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் மகாதேவன் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் வலுவான நிலையில் கேந்திரத்தில் உள்ளார். எதிர்காலம் நன்றாக இருக்கும். காதலைக் குறிக்கும் கிரகமான சுக்கிரன் சனியின் பார்வை பெறுவதால், காதலில் வெற்றி பெறுவது என்பது சற்று சிரமமே. கிடைக்கின்ற வாழ்க்கையை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை என்பது இனிமையாகும். வாழ்வில் காதல் ஒரு பகுதி. எனவே வாழ்க்கை தரும் வாய்ப்புகளை வளம் பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
தற்சமயம் சுயதொழில் தொடங்கலாமா அல்லது எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எஸ்.நவீன், ராணிப்பேட்டை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் நவீன் அவர்களே!
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் துலாம் ஆகும். தற்பொழுது தங்களுக்கு தனியார் துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தாங்கள் நல்ல வேலையில் அமர, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
சொந்தமாக பிஸினஸ் ஆரம்பிக்கலாமா அல்லது ஏதேனும் வேலைக்குச் செல்லலாமா? பிஸினஸ் என்றால் ஷேர் மார்க்கெட் நல்லதா.. அல்லது ஆடைகள் சம்பந்தமான பிஸினஸ் நல்லதா? – பி.மோகன்ராஜ், திருப்பூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் மோகன்ராஜ் அவர்களே!
33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் சிம்மம் ஆகும். தங்களுடைய ஜாதகத்தில் 11-ல் செவ்வாய் வலுவாக இருப்பதால், தாங்கள் வேலையில் நன்கு பிரகாசிக்கலாம். ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் முடக்காமல் சீராக செய்து வந்தால், லாபம் கிட்டும். வளமான வாழ்க்கை பெற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“