ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? – மஞ்ஜு, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி மஞ்சு அவர்களே !

37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் தனுசு. தங்களின் லக்னாதிபதி குரு புத்திர பாக்கியத்தை அள்ளித்தரும் 5ம் வீட்டில் உள்ளதால், வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டு வருவதோடு, கோமாதா படத்தை வைத்து, வெள்ளிக்கிழமை தோறும் கோமாதா பூஜை செய்து வரவும். மே மாதம் 2012 க்குள் குழந்தை பாக்கியம் கிட்டும். விரைவில் தங்களின் இல்லத்தில் மழலை தவழ நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

நான் CA (சார்ட்டட் அக்கௌன்டன்ட்) படிப்பு படிக்க ஆசைப்படுகிறேன். என் எண்ணம் வெற்றி பெறுமா? – ராமகிருஷ்ணன், சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராம கிருஷ்ணன் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம். லக்னம் சிம்மம். தங்களின் ஜாதகப்படி தாங்கள் சி.ஏ படிப்பு நல்ல படியாக படிக்க முடியும். மேற் சொன்ன படிப்பில், சிறப்பான மதிப்பெண் பெற, குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையை படித்து வரவும். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author