ஜோதிடம் கேளுங்கள்

எனக்கும் எனது கணவருக்கும் உள்ள நிலை, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் கணவரின் தொழில் குறித்த நிலை பற்றி பலன் சொல்ல வேண்டுகிறேன் – லோகநாயகி, உப்பிலியாபுரம்.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகி லோகநாயகி அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் மீனம்.தங்களின் ஜாதகத்தில், 7-ஆம் இடத்திலிருக்கும் கணவனைக் குறிக்கும்கிரகமான புதன், குருவின் பார்வையைப் பெறுவதால், தங்கள் கணவரின் தொழில்நிலையும், குழந்தைகளின் எதிர்காலமும் நன்றாக இருக்கும். தங்களின் ஜாதகத்தில், 8-இல் சனி இருப்பதால், முயற்சிகளில் சிறிது தேக்கம் உண்டாகிப்பிறகுநல்ல பலன் கிடைக்கும். இந்தத் தேக்க நிலை மாற, தினமும் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள்! தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையநிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

*****************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
 
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author