ஜோதிடம் கேளுங்கள்

என் மகள் ஜாதகத்தில் சனி 12ல் இருக்கிறது என்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும்? – எம்.ஜே.ஷண்முகப்ரியா, கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி ஷண்முகப்பிரியாவின் அன்னை அவர்களே!

4 வயதாகும் தங்கள் மகளின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் சிம்மம் ஆகும். 12-ல் சனி இருப்பதை எண்ணி தாங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் மகளுக்கு சளி மற்றும் ஒவ்வாமைத் தொந்தரவுகள் வரும் வாய்ப்பிருப்பதால், மகளின் ஆரோக்கியத்தைக் கவனித்து வாருங்கள். மேலும் சனிக்கிழமை தோறும் பெருமாளைத் தரிசனம் செய்துவர வாழ்க்கை வளமாக இருக்கும். தங்கள் மகள் வாழ்க்கையில் சிறந்து விளங்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******

நான் எப்பொழுது புதிய வீடு வாங்க முடியும்? – பாரதி, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி பாரதி அவர்களே!

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகப்படி 4-ல் இருக்கும் செவ்வாயின் திசை நடந்து கொண்டிருக்கிறது. குரு பகவான் மீன ராசியில் மே மாதம் 2011 வரை தங்கியிருக்கும் கால கட்டத்தில் தங்களுக்கு புது வீடு வாங்கும் யோகம் கிட்டும். விருப்பம் போல புது வீடு வாங்கி வளமாக வாழ நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

என் பதவி / சம்பாத்திய உயர்வு விரைவில் நிகழுமா? – சாந்திகுமார் அரியரத்னம், ஜாஃப்னா.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சாந்திகுமார் அரியரத்னம் அவர்களே!

53 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி தங்களின் ராசியிலிருந்து 11-ம் இடமான கும்பத்திற்கு குரு பகவான் டிசம்பர் மாதம் செல்கிறார். இந்தக் கால கட்டத்தில் சம்பாத்திய உயர்வு கிட்டும். சம்பாத்திய உயர்வுக்கும், அதன் மூலம் வாழ்க்கை வளம் உயர்வதற்கும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author