எனக்கு எல்லாம் நல்லபடியாக அமைந்தும், மனதில் ஒரு நிம்மதியற்ற நிலைமையும் தேவையில்லாத யோசனைகளும் எதற்கெடுத்தாலும் டென்சனும் மனப் படபடப்புமாக இருக்கின்றது. இது எதனால் எனக் கூறமுடியுமா? – மலர், யாழ்ப்பாணம்.
அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகி மலர் அவர்களே !
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம் தனுசு. தங்களின் ஜாதகத்தில், மன நிலையைக் குறிக்கும் கிரகமான சந்திரன் சனியுடன் இணைந்திருப்பதால், தேவையற்ற யோசனைகளும், படபடப்பும் தலை காட்டும். மன அமைதி பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள சந்திரன் துதியை அன்றாடம் சொல்லி வாருங்கள்!
சந்திரன் துதி
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி! திருவருள் தருவாய்
சந்திரா போற்றி! சற்குரு போற்றி!
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி!
தங்களின் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பூக்க ‘நிலாச்சாரலின்’ வாழ்த்துகள்!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com
“