என்னுடைய எதிர்கால வாழ்க்கை மற்றும் திருமணம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் – நிரஞ்சன் சுந்தரலிங்கம், ஆஸ்திரேலியா.
அன்பு நிலாச்சாரல் வாசகர் நிரஞ்சன் சுந்தர லிங்கம் அவர்களே !
39 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரட்டாதி, ராசி மீனம், லக்னம் கும்பம். தங்களின் ஜாதகப்படி, லக்னாதிபதியான சனி 4-ம் இடத்தில் இருப்பதால் எதிர்காலம் நன்றாக இருக்கும். தங்களின் ராசியிலிருந்து 2-ம் இடத்திற்கு குரு மாறியுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைக்கூடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
நான் என் மாமாவை திருமணம் செய்ய விரும்புகிறேன்? இருவருக்கும் திருமணம் நடக்குமா? – சரண்யா, கோயம்புத்தூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகி சரண்யா அவர்களே !
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் விருச்சிகம். தங்களின் ஜாதகப்படி பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் நிறைவேறுவதற்கான அமைப்பு உள்ளது. தங்களுக்கு நல்ல வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
ENAKKU THABOTHAIYA KALA NILAI MOSAMAKA ULLATHU. EN ENAKKU IVVARU ULLATHU ENPATHAI THELIUPATUTHUNGAL.
என் மனதில் ஒருவரை நினைத்துல்லேன். அவர் வெரு இனத்தை சேர்ந்தவர்.அவரை என் உயிராக நினைத்துக்கொண்டிருக்கிரேன்.எங்கல் திருமணம் நடைபெருமா?
மகர ராசிக்கு இப்ப எப்படி இருக்கு.னா நல்லா படிப்பேனா.வேலை கிடைக்குமா.இப்ப நேரம் எப்படி இருக்கு பாத்து சொல்லுங்க.கனவன் கிடைபானா.