எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? இந்தியப் பெண் அமைவாரா? என்ன பரிகாரம் தேவை? – அருள், ஒஹியோ, யு.எஸ்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. அருள் அவர்களே!
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் துலாம் ஆகும். இந்தியப் பெண் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள். தங்களின் நட்சத்திரம் ஆயில்யம் வரும் நாளில், பெருமாள் கோவிலில் தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வர, திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும்.
எனக்கு 21.8.2006ல் திருமணம் ஆனது. எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்? – வித்யா சந்திரன், சென்னை.
அன்பு நிலாச்சாரல் வாசகி வித்யா சந்திரன் அவர்களே!
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி மகம், லக்னம் தனுசு ஆகும். குழந்தை பாக்கியத்தை நல்கும் குரு தங்களின் ராசியான சிம்மத்தை மே மாதம் முதல் பார்ப்பதால், குழந்தை பாக்யம் விரைவில் கிட்டும். தங்களின் நட்சத்திரம் பூரம் சுக்கிரனின் சாரம் பெற்றிருப்பதால், தினமும் சந்தான லட்சுமிக்கு உரிய பாடலைப் படித்து வாருங்கள். தங்களின் இல்லத்தில் மழலைச் செல்வம் தவழ நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். நினைத்தாலே பயமாக இருக்கிறது. நான் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேற முடியுமா? – எம்.ஸ்ரீனிவாசன், ராசிபுரம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் ஸ்ரீனிவாசன் அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகப்படி, குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தங்களின் தொழில்வளம் மற்றும் எதிர்காலம் நன்றாக இருக்கும். மனித மனம் எல்லையில்லாத சக்தி கொண்டது. தங்களின் நட்சத்திர அதிபதி சந்திரனை திங்கள்கிழமை தோறும் தரிசனம் செய்து வர, மனம் தெளிவும், தைரியமும் பெறும். ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தங்களை நாடி வரும்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
பூரம் நட்சத்திரம் பிரந்த குலந்தைக்கு என்ன எழுத்தில் பெயர் விடலாம் ஆன் குழந்தை