ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்? – ராமச்சந்திரன், மதுரை

அன்புள்ள நிலாச்சாரல் வாசகர் திரு. ராமச்சந்திரன் அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, கோசார குரு, மே மாதம் தங்களின் 5-ம் வீட்டுக்கு மாறும் காலம் புத்ரபாக்யத்தை நல்குவார். வியாழக் கிழமைகளில், குரு பகவானுக்கு கறுப்பு நிறக் கொண்டைக் கடலை நிவேதனம் செய்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வருவதுடன், தங்கள் குல தெய்வத்தையும் வழிபட்டு வாருங்கள். விரைவில் மழலைச் செல்வம் வீட்டில் விளையாட, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

நான் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எப்பொழுது அது முடிவடையும்? என்னுடைய பிசினஸ் எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? – ராஜகோபால், கோயம்புத்தூர்

அன்புள்ள நிலாச்சாரல் வாசகர் திரு. ராஜகோபால் அவர்களே!
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஸ்வாதி, ராசி துலாம், லக்னம் மேஷம் ஆகும். தாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீடு ஜுலை மாதத்திற்குள் முடிவடைந்து விடும். நண்பர்களை அளவுக்கு அதிகமாக நம்பாமல் விழிப்போடு செயல்பட்டால் வியாபாரம் நன்றாக இருக்கும். திருமணம் அக்டோபர் மாதத்திற்கு பின் கை கூடி விடும்.

*****

நான் ஒருவரைக் காதலிக்கிறேன். என் திருமணம் எப்போது நடக்கும். நல்ல வேலை எப்போது கிடைக்கும். வெளிநாடு செல்வேனா? – ஷைலஜா, கோயம்புத்தூர்

அன்புள்ள நிலாச்சாரல் வாசகி ஷைலஜா அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற்றுவிடும். நல்ல வேலை செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும். தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பிருக்கிறது.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author