ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது திருப்தியான வேலை கிடைத்து, வாழ்க்கை அமைதியாய் நடக்கும்? அபுதாபியில் வேலை செய்து வருகிறேன். மனம் குழப்பத்தில் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. – ஜெயபிரகாஷ், குடியாத்தம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.ஜெயபிரகாஷ் அவர்களே!
35 வயதாகும் தங்களின் ராசி மகரம், நட்சத்திரம் உத்திராடம், லக்னம் கடகம் ஆகும். செப்டம்பர் மாதம் சனி அஷ்டமச் சனி என்ற நிலையிலிருந்து மாறுவதால், தாங்கள் விரும்பியபடி நல்ல வேலையும், அமைதியான வாழ்க்கையும் கிட்டும். தாங்கள் கடக லக்னத்தைச் சேர்ந்தவராதலால் சிறிய மற்றும் தேவையற்ற விஷயங்களுக்கும் மனதை குழப்பிக் கொள்ளும் சுபாவம் உடையவர். எனவே, மனதை ஒருமுகப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வர, குழப்பங்கள் நீங்கி, சிந்தனை வளம் பெருகும்.

*****

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது சுயதொழில் நல்லதா? – சாரா, மதுரை

அன்பு நிலாச்சாரல் வாசகி சாரா அவர்களே!
30 வயதாகும் தங்களின் லக்னம் துலாம், ராசி தனுசு, நட்சத்திரம் மூலம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், குருவும் சுக்ரனும் 9-ம் இடத்தில் இருப்பதால், தாங்கள் பொதுஜனத் தொடர்பு, சேவை மையம் போன்ற பொதுத் துறைகளில் வேலை செய்து நல்ல புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

*****

அன்புள்ள காயத்ரி மேடம், எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகப் போகிறது. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? – மஹி, கோயம்புத்தூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி மஹி அவர்களே!
31 வயதாகும் தங்களின் லக்னம் சிம்மம், ராசி மிதுனம், நட்சத்திரம் திருவாதிரை ஆகும். தங்களின் ஜாதகப்படி 5-ம் வீட்டுக்கு உடைய குரு, கோசார ரீதியாக மே மாதம் 2009 முதல் ஆகஸ்டு 2009 வரையிலும், டிசம்பர் 2009 முதல் ஒரு வருட காலமும் தங்களின் லாபஸ்தானமான 11-ம் வீட்டைப் பார்ப்பதால், விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். அபிராமி அந்தாதியில் உள்ள தாமம் கடம்பு என்று துவங்கும் 73வது பாடலைப் படித்து வாருங்கள். குழந்தைப்பேறு என்னும் செல்வம் கிடைக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

 

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

2 Comments

Comments are closed.