எனக்கு கடந்த 5 வருடங்களாக சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை. என் வியாபார ஆசை நிறைவேறுமா? தயவு செய்து பதிலளிக்கவும் – கல்யாண், மும்பை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கல்யாண சுந்தரம் அவர்களே !
41 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் 5-ம் அதிபதியான குரு, 8-ல் மறைந்திருப்பதால், தாங்கள் சொந்தப் பணம் போட்டு வியாபாரம் செய்வதைத் தவிர்த்து வியாபாரத்திற்குத் தேவையான சேவை மையம் (consultancy service) வைத்து, தாங்கள் நல்கும் ஆலோசனைக்கு உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டால் அது சிறப்பாக இருக்கும். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
என்னுடைய மனம் ஸ்திரமாக இருப்பதில்லை. காரணம் என்ன ? பரிகாரம் இருந்தால் சொல்லவும். நன்றி! – சனத்குமார், சென்னை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் சனத்குமார் அவர்களே !
37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் தனுசு ஆகும். ஜாதக ரீதியாக மன நிலையைக் குறிக்கும் கிரகமான சந்திரன் தங்களின் ஜாதகத்தில் , பகை கிரகமான கேதுவின் நட்சத்திரத்தைப் பெற்றிருப்பதால், தங்களின் மனம் ஸ்திரமான நிலையில் இருப்பதில்லை. இதற்கு உரிய பரிகாரமாக, தாங்கள் திங்கள் கிழமை தோறும் சந்திர பகவானை வழிபட்டு, " எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய், சந்திரா போற்றி! சற்குரு போற்றி, சங்கடந்தீர்ப்பாய் சதுரா போற்றி! என்ற துதியை சொல்லி வர, மனம் ஸ்திரமான நிலையை அடையும். நிலாச் சாரலின் அன்பான வாழ்த்துக்கள் தங்களுக்கு உரித்தாகட்டும்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“