இது வரை தொழில் சரியாக அமையவில்லை. என்ன தொழில் செய்யலாம்? எப்பொழுது அமையும்? – கிருஷ்ணன் சுபாஷ், கண்ணூர்
அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சுபாஷ் அவர்களே!
37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம், லக்னம் தனுசு ஆகும். கல்வித் துறையைச் சார்ந்த தொழில் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். தற்போது நடைபெறும் சூரிய திசை சந்திர புத்தி 28-8-2009ல் முடிவடைகிறது. இதற்குப் பின் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
என் திருமணம் தொடர்ந்து தடை படுகிறது. காரணம் என்ன? எப்போது நடைபெறும்? தயவு செய்து பதில் அனுப்பவும் – லக்ஷ்மி, ராயபுரம்
அன்பு நிலாச்சாரல் வாசகி லக்ஷ்மி அவர்களே!
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை ஆகும். திருமணத்தடை நீங்க, புதன் கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வதோடு, முழுப்பச்சை பயிறு சுண்டல் நிவேதனம் செய்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வர, விரைவில் திருமணம் கை கூடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
நான் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். நான் பரீட்சை நன்றாக எழுதினாலும் தேர்ச்சி அடையவில்லை. நான் மீண்டும் எழுதுவதாக இருக்கிறேன். வெற்றி பெற முடியுமா? – எஸ்.கவிதா, ஈரோடு
அன்பு நிலாச்சாரல் வாசகி கவிதா அவர்களே!
18 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் கும்பம் ஆகும். தோல்வியைக் கண்டு துவள வேண்டாம்.ஜாதக ரீதியாக நல்ல கல்வி உண்டு. குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
மேலே குரிப்பிட்டவைகலை தருக