எனது திருமண வாழ்க்கையைப் பற்றி விளக்குங்கள். எனது குடும்பத்தார் எப்போது மேன்மை அடைவர்? – வி. தனசேகரன், கிருஷ்ணகிரி.
அன்பு நிலாச்சாரல் வாசகர் தனசேகரன் அவர்களே !
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், குரு 2-ல் இருப்பதால், தங்களின் எதிர்காலம் வளமாக இருக்கும். 5-ல் செவ்வாய், சுக்ரன் இருவரும் இணைந்திருப்பதால், மண வாழ்வு நன்றாக இருப்பதோடு தங்களுக்கு மனைவி வழி உறவுகளின் ஆதரவும் உண்டு. தங்கள் ராசிப்படி ஏழரை சனி நடை பெற்றுக் கொண்டிக்கிறது. அது முடிந்த பின் குடும்பத்தினர் நல்ல மேன்மையான நிலையில் இருப்பர். நல்ல வாழ்வு அமைய நிலாச் சாரல் தங்களை வாழ்த்துகிறது.
என் திருமணம் எப்போது நடக்கும்? – ஆளியார் முஃபீதா உம்மா, பாலமுனை.
அன்பு நிலாச்சாரல் வாசக வட்டத்தை சேர்ந்த ஆளியார் முஃபீதா உம்மா அவர்களே !
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னமும் கடகம். இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களுக்கு நல்ல மண வாழ்வு அமையும். நல்ல மண வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
எனக்கு 7 இல் சுர்யன், சுக்ரன், செவ்வாய் இருகிருரர். மன வாழ்கை பிரசனை உல்லது. ஒரு வழி குருஙல்