ஜோதிடம் கேளுங்கள் !

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது சுயதொழில் நல்லதா? – ஆர்.கதிரேசன், திண்டுக்கல்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. கதிரேசன் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் மேஷம் ஆகும். உங்களுக்கு தனியார் துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன.

****

மரியாதைக்குரிய திருமதி காயத்ரி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகப் போகின்றது. எனக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுது கிட்டும்? இது எனக்கு மிகுந்த மன குழப்பத்தை தருகிறது. தயவு கூர்ந்து நல்ல பதில் தருமாறு வேண்டுகிறேன். நன்றி – என்.மஞ்சுளா, அம்பாசமுத்திரம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி மஞ்சுளா அவர்களே!

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் கடகம் ஆகும். தினமும் சந்தானலக்ஷ்மி துதி சொல்லி வாருங்கள். தற்பொழுது சூரிய திசையில் சந்திர புக்தி 09-07-09 வரை நடைபெறும். இதற்குப் பிறகு வரும் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய் புத்தியில் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். தங்களுக்கு விரைவில் மழலை பாக்கியம் கிட்ட நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

****

அமைச்சர் பதவி வகிக்கவேண்டும் என்பது என் வாழ்வின் லட்சியம். அந்தக் கனவு நிறைவேறுமா? எந்த வயதில்? – பி.துரை, கடலூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. துரை அவர்களே!

34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் ரிஷபம் ஆகும். தங்களின் ஜாதகப்படி தங்களுக்கு கிடைக்கும் அரசியல் தொடர்புகள் மூலம் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இயலும்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author