ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? நான் ஒருவரை கடந்த ஒரு வருடமாக மிகவும் நேசிக்கிறேன். முதலில் என்னை நேசித்தவர் தற்போது விலகிச் செல்கிறார். நான் அவருடன்தான் வாழ ஆசைப் படுகிறேன். – கோகிலாதேவி, கூடலூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி கோகிலாதேவி அவர்களே!

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திராடம், ராசி மகரம், லக்னம் துலாம் ஆகும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களை நேசித்தவருடன் திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. விலகிச் சென்றவர் மீண்டும் நேசத்தைப் பொழிய, ராதா கிருஷ்ணரை வழிபட்டு வரவும். தங்களின் லக்னாதிபதியான சுக்ரனை வெள்ளி தோறும் தரிசனம் செய்து வர சிறப்பான மண வாழ்க்கை அமையும்.

*****

எனக்கு நல்ல கல்வி அமையுமா? ஏதேனும் பரிகாரம் சொல்ல முடியுமா? – கங்காதர் ஈஸ்வரன், சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகர் கங்காதர் ஈஸ்வரன் அவர்களே!

தங்களின் ராசி மிதுனம், நட்சத்திரம் திருவாதிரை, லக்னம் கும்பம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் கல்வியைக் குறிக்கும் புதன் 11-ம் வீட்டில், 11-ம் அதிபதியுடன் இணைந்து இருப்பதால் நல்ல கல்வி உண்டு. சந்திரன் புதன் வீட்டில் அமர்ந்துள்ளதால், சில நேரங்களில் பாடங்களைப் பயின்ற பின்னர் உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற மனக்கிலேசம் தீர, புத்திக்கு அதிபதியான புதனை புதன் கிழமை தோறும் வழிபட்டு வர, கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

******

திருமணமாகி நான்கு வருடங்களாகியும் இன்னும் குழந்தை இல்லை. எனக்கு எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும்? – குமுதினி, ஸ்ரீலங்கா

அன்பு நிலச்சாரல் வாசகி குமுதினி அவர்களே!

31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் தனுசு ஆகும். தங்களின் ராசியிலிருந்து தற்போது 10-ல் இருக்கும் குரு, மே மாதம் முதல் 11-ம் இடத்துக்கு மாறும் காலம் தங்களுக்கு புத்திர பாக்கியத்தை நல்குவார். தங்களின் ஜாதகத்தில், 5-ம் அதிபதியான செவ்வாய் 8-ல் அமர்ந்திருப்பதால், சஷ்டியன்று முருகனை வழிபட்டு கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள். விரைவில் மழலைச் செல்வம் மடி மேல் தவழும்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. gokiladevi.k

    அன்புள்ள காயத்ரி Mஅடம் அவர்கலுகு வணக்கம் உங்கள் கடிதம் கண்டென் எனக்கு மிகவும் சந்தொசமாக உல்லது என்னல் நம்ப முடியவில்லை நான் நிரைய ஜோதிடர் கிட என் ஜாதகதை காமிதென் எல்லரும் அவர் உனகு கிடைக்க மாட்டர் மரன்டு விடு என்ட்ரு தான் சொன்னர்கல் நேஙல் என்னை ஆருதல் படுத இப்படி சொன்னேர்கல் என்ட்ரு தொனுது நன் ரத க்ரிஷ்னரைதான் கும்புடுகிரென் எனகு எல்லம் அவர்தன் தன்க்யொஉ.

Comments are closed.