எனக்கு உயர்வு பதவி கிடைக்குமா? சம்பள உயர்வுக்கு வாய்ப்புகள் உண்டா? என் மகன் சதிஷ் (22.05.1991 & 6:25AM) வாழ்க்கை எப்படி இருக்கும்? அவனின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா? – ஃபிரேடா அந்தோணிமேரி, கோலாலம்பூர், மலேசியா.
அன்பு நிலாச்சாரல் வாசகி ஃப்ரீடா அந்தோனிமேரி அவர்களே!
38 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரட்டாதி, ராசி மீனம், லக்னம் கடகம் ஆகும். தங்கள் ஜாதகப்படி தற்பொழுது லாபத்தை அளிக்கும் 11-ம் வீட்டின் அதிபதியான சுக்ர திசையும், தொழில் ஸ்தானத்தைக் குறிக்கும் குரு புத்தியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் விரும்பியபடி பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வாருங்கள். பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
தங்களின் மகன் சதீஷ் அவர்களுக்கு 18 வயதாகிறது. அவரின் ராசி சிம்மம், நட்சத்திரம் பூரம், லக்னம் ரிஷபம் ஆகும். தங்களின் மகன் ஜாதகத்தில் 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால், தங்களின் குல தெய்வ வழிபாடு அல்லது பிரார்த்தனை விட்டுப் போயிருந்தால் அதனை சரிவர செய்து முடித்துவிட்டால், மகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். சதீஷின் வாழ்க்கை வளம் பெற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
என் வாழ்வில் எப்போது முன்னேற்றம் கிடைக்கும்? நான் எப்போது வீடு வாங்குவேன். – ஆர்.கே.சுப்பிரமணியன், மதுரை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் சுப்ரமணியன் அவர்களே!
48 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் ரிஷபம் ஆகும். தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் கேது தெசையில், செப்டம்பர் 25, 2011 முதல் தொடங்கி செப். 1, 2012 வரை வியாபித்திருக்கும் குரு புக்திக்காலம் தங்களுக்கு உயர்வையும், சொந்த வீடு கட்டும் வாய்ப்பினையும் அளிக்கும். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
எனக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும். மாப்பிள்ளையின் வேலை மற்றும் குணங்கள் பற்றி கூறவும். – சரண்யா, தூத்துக்குடி.
அன்பு நிலாச்சாரல் வாசகி சரண்யா அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் கடகம் ஆகும். குரு பகவான் மே 2010 முதல் தங்களின் ராசியிலிருந்து 5-ம் இடத்திலும், தங்களின் லக்னத்திலிருந்து 9-ம் இடத்திலும் இருக்கும் காலம், திருமண பாக்கியத்தை நல்குவார். வரப்போகின்ற மணமகன் பொதுமக்களை சந்திக்கும் துறையில் பணிபுரிபவராகவும், 7-ம் வீட்டில் குரு இருப்பதால்,நல்ல குணநலன்கள் உடையவராகவும் இருப்பார். நல்ல மணவாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
எனது திருமணம் எப்போது நடக்கும். நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? – வி.ஜகன்னாதன், மயிலாடுதுறை
அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜகன்னாதன் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகத்தில் 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால், தங்களின் குல தெய்வத்தை வழிபடுவதோடு,
வெள்ளிக்கிழமைகளில் நாக தேவதையையும் வழிபட்டு வாருங்கள். தங்களின் ஜென்ம நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திரம் வரும் நாளில் பெருமாளை துதித்து வர, ஜனவரி 2010க்குள் திருமணம் கை கூடிவிடும். விரைவில் திருமணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“