அன்பு நிலாச்சாரல் வாசகர் விஜயபாஸ்கர் அவர்களே !
35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் மேஷம். தங்களின் ஜாதகத்தில், குரு லக்னத்தில் இருப்பதால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மேலும் டிசம்பர் மாதம் வருகின்ற சனிப்பெயர்ச்சி, தங்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும். 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வர, தங்களின் குடும்ப நிலை உயர்வான நிலைக்கு செல்லும். வளமான வாழ்க்கை பெற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
******
குஜ தோஷம் என்றால் என்ன? – ஏ. செந்தில், குடியாத்தம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் செந்தில் அவர்களே !
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் ரிஷபம். செவ்வாய் ராசி அல்லது லக்னத்திலிருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருப்பதை குஜ தோஷம் என்று கூறுவார்கள். தங்களின் ஜாதகத்தில் லக்னத்தில் இருக்கும் செவ்வாய், 7-ல் இருக்கும் குருவின் பார்வையைப் பெறுவதால், குஜ தோஷம் இல்லை என்பதை அறியவும்.
******
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
<https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp>
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“