வணக்கம். என்னுடைய லக்கினம் என்ன? அதன் பலன்களை தயவு செய்து சொல்லவும் – கணேஷ்குமார், காரைக்குடி.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கணேஷ் குமார் அவர்களே !
தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள்படி, தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம். லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகத்தில், 9-ல் இருக்கும் குரு, லக்னம், 3,5 வீடுகளைப் பார்ப்பதால், தங்களுக்கு ஆன்மீக நாட்டமும், நல்லவர்களின் நட்பு, வழிகாட்டுதல் ஆகியவை கிட்டும். இளகிய மனம் உடைய தாங்கள் பிறருக்கு உதவுவதில் உவகை கொள்வீர்கள். தனுசு லக்னத்தில் பிறந்த தாங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
********
எனது பையனுக்கு மீனலக்னம், மகரராசி, திருவோணம் நட்சத்திரம்; ராகுதிசைஆரம்பம். எனக்கு மீனலக்னம், தனுசுராசி, பூராடம் நட்சத்திரம். விரைவில் ராகுதிசை ஆரம்பம். சமதிசை கெடுதலா?- எஸ். பொன்ராசன், ஒட்டன்சத்திரம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் பொன்ராசன் அவர்களே !
தங்களின் மகனின் ஜாதகப்படி, 14.10.2011 வரை செவ்வாய்திசை சந்திர புக்தி நடைபெறும். இதன் பின்னர், ராகுதிசை ஆரம்பம் ஆகும். தங்களுக்கும் ராகு திசை ஆரம்பம் ஆனாலும், புக்திகள் வெவ்வேறாய் இருக்கும் நிலை இருந்தால், கெடுதல் இராது. தாங்கள் செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு வர, ராகுவின் பூரண அருளைப் பெறலாம்.
*********
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
<https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp>
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.“