ஜோதிடம் கேளுங்கள்

எனது திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்குமா? – எஸ்.வின்சென்ட் ராஜ், திருச்சி

அன்பு நிலாச்சாரல் வாசகர் வின்சென்ட் அவர்களே!

31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் மீனம் ஆகும். தங்களின் திருமணம் காதல் திருமணமாக கை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தங்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாய் இருக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

****

கடந்த ஐந்து வருடங்களாக நல்ல வேலை கிடைக்கவில்லை. சில வாய்ப்புகள் வந்தாலும் அவை பிடித்தவையாக இல்லை. எனக்கு நல்ல வேலை கிடைக்குமா? அல்லது தொழில் தொடங்கலாமா? – கோபி, மாயவரம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் கோபி அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் மகரம் ஆகும்.

தங்களுக்கு வியாபாரத்தை விட, வேலை நல்லதைத் தரும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசனம் செய்து வாருங்கள். நல்ல வேலை ஆகஸ்டு மாதத்திற்குப் பின் கிடைக்கும். தாங்கள் நினைத்தவாறு நல்ல வேலையில் அமர, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

****

என் மாமியாரும், மாமனாரும் எனக்கும் என் பெற்றோருக்கும் மிகுந்த பிரச்சினைகளை தந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கிறேன். இப்பிரச்சினை எப்போது தீரும் என்று கூறவும். – உதயரோகிணி, மதுரை
அன்பு நிலாச்சாரல் வாசகி உதய ரோகிணி அவர்களே!

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ராசி மற்றும் லக்னத்தின் அதிபதியான சந்திரனை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். குடும்பத்தில் நிலவி வரும் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் இரண்டு மாதங்களுக்குப் பின் படிப்படியாய் தீரும். பிரச்சினைகள் தீர்ந்து அமைதியான குடும்ப வாழ்க்கையும், சகஜமான உறவும் கிடைக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

****

எனது திருமணம் காதல் மணமாக அமையுமா அல்லது அம்மா பார்க்கும் வரனாக அமையுமா? சில ஜோதிடர்கள் எனது முதல் திருமணம் விவாகரத்தில் முடியுமெனக் கூறுகிறார்களே? – ஹேமலதா, க்ளாங், செலங்கொர், மலேசியா

அன்பு நிலாச்சாரல் வாசகி ஹேமலதா அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் தனுசு ஆகும். தாங்கள் பயப்படுவது போல் எதுவும் நடவாது. அம்மா பார்க்கும் வரன் மூலம் திருமணம் நடைபெறும். குடும்பம், களத்திர ஸ்தானங்கள் நல்லவிதமாக அமைந்திருக்கும் மணமகன் ஜாதகத்தினை தேர்வு செய்தால் தங்களின் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்கள் ஜாதகத்தில் 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால், வெள்ளிக்கிழமைகளில் நாக முத்துமாரியம்மன் மற்றும் துளசியை வணங்கி வாருங்கள். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு முன், திருமணம் கை கூடிவிடும். விரைவில் திருமணம் நடைபெறவும், நல்ல மண வாழ்க்கை அமையவும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****
***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author