ஜோதிடம் கேளுங்கள்

என் திருமணம் எப்போது நடக்கும்? மணப்பெண் சொந்தத்தில் அமையுமா அல்லது அந்நியமா? – வடிவேல் ராஜா, மதுரை

அன்பு நிலாச்சாரல் வாசகர் வடிவேல் ராஜா அவர்களே!

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் துலாம் ஆகும். தங்களுக்குத் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடிவிடும். மணப்பெண் அந்நியத்தில் அமைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அருமையான வாழ்க்கைத்துணை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****

எனக்கு என்ன பிஸினஸ் நன்றாக வரும்? – உமா, சிதம்பரம்

அன்பு நிலாச்சாரல் வாசகி உமா அவர்களே!

39 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் கன்னி ஆகும். தங்களுக்கு மாணவ மாணவியருக்குத் தேவைப்படும் நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை (ஸ்டேஷனரி) வியாபாரம் செய்வது லாபம் தரும். தொழிலில் சாதிக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எனக்குத் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிவிட்டன. 2 மாதங்களாக எங்கள் இருவருக்குமிடையே சரியான பேச்சு வார்த்தை இல்லை. ஆரம்பித்த பிரச்சினை சிறியதானாலும், என்னை முகத்துக்கு நேராக பார்ப்பது இல்லை. இது எப்போது சரியாகும்? – ஊரும், பெயரும் வெளியிட விரும்பாத வாசகி

அன்பு நிலாச்சாரல் வாசகி அவர்களே!

38 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் மீனம் ஆகும். கணவருக்கும், தங்களுக்கும் இடையே உள்ள மன வேற்றுமை தீர, தினமும் திருவிளக்கு பாடல் படித்து, தீப வழிபாடு செய்து வரவும். 8-ம் இடத்தில் இருக்கும் குரு, 9-ம் வீடு செல்லும் போது இந்த பிரச்சினை தீர்ந்துவிடும். தம்பதிகள் மன ஒற்றுமையுடன் விளங்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****

எலெக்ட் ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு கணினித் துறையில் மார்க்கெட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய தொழில் திருப்திகரமாக அமையவில்லை. வேறு என்ன தொழில் செய்யலாம்? வெளிநாடு வாய்ப்பு உண்டா? – சுரேஷ், சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகர் சுரேஷ் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் கன்னி ஆகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. நிரந்தரத் தொழில் அமைய, தங்களின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை வரும் நாளில் சிவனை ஆராதித்து வாருங்கள். இப்பொழுது தாங்கள் பார்க்கும் தொழிலையே தொடரலாம். நிரந்தரமான, திருப்திகரமான தொழில் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****
***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

Comments are closed.