எனக்கு வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறதா? – பாலாஜி, சென்னை
அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. பாலாஜி அவர்களே,
ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசியில், மேஷ லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தற்போது 26 வயது ஆகிறது. தங்களின் ஜாதகத்தில் குரு 9-ம் வீட்டில் இருந்து கொண்டு 5-ம் வீட்டைப் பார்ப்பதாலும், லக்னாதிபதி செவ்வாயின் பார்வையை குரு பெறுவதாலும் தங்களுக்கு வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறது.
எனக்கு எப்போது நிலையான வேலை கிடைக்கும்? மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது. 2005ல் நல்ல வேலையை விட்ட பிறகு திருப்தியான வேலை கிடைக்கவில்லை. – நாராயணன், மும்பை
அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. நாராயணன் அவர்களே,
தற்போது 51 வயது ஆகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி; ராசி மீனம்; லக்னம் மிதுனம். அக்டோபர் 16 வரை நடக்கின்ற சுக்ர திசை சந்திர புக்தி தங்களுக்கு வளம், முன்னேற்றம் இரண்டையும் தரும் காலம். எனவே, தாங்கள் மேற்சொன்ன காலகட்டத்திற்குள் நிரந்தர, நல்ல வேலையில் அமர்வீர்கள். உறுதியான மனம் பெறவும் தெளிவான முடிவு எடுக்கவும், துர்க்கையை வழிபட்டு வாருங்கள். முடிந்து போன அத்தியாயமான 2005 வேலையைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். அதை விட சிறப்பான வேலை தங்களுக்குக் காத்திருக்கிறது. மேலும், தங்கள் ராசியிலிருந்து குரு 11-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். முழு பலன் கிடைக்கும். பல வளங்கள் உங்கள் வாழ்வில் வந்து சேரும்.
நான் பண கஷ்டத்தில் இருக்கிறேன். பிரச்சினை எப்போது தீரும்? – ஸ்ரீதர், மதுரை
அன்பு நிலாச் சாரல் வாசகர் திரு. ஸ்ரீதர் அவர்களே,
மேஷ லக்னம், சித்திரை நட்சத்திரம் துலாராசியில் பிறந்துள்ள தங்களுக்கு தற்போது 42 வயது ஆகிறது. தங்களின் லக்னத்தில் இருந்து 8-ல் இருக்கும் கேதுவின் புக்தி 9-6-09 அன்று முடிவடைகிறது. கேது புக்தி முடியும் வரை பிரதோஷம் அன்று சிவனை வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு ஆரம்பிக்கும் சுக்ர புக்தி தங்களின் பணக் கஷ்டத்தை நீக்குவதோடு பொருளாதார உயர்வையும் தரும்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
“
எனகு அரசு வேலை கிடைகுமா
This blog is very useful to all. Because anybody want see and learn more details insight