இந்த சனிப் பெயர்ச்சிக்கு பிறகு எனக்கு பலன்கள் எப்படி இருக்கும்? தொழில்வளம் எப்படி இருக்கும்? – பால், கொழும்பு.
அன்பு நிலாச்சாரல் வாசகர் பால் அவர்களே!
37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம் மேஷம். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, சனி தன் உச்ச வீடான துலாத்திற்கு செல்வதால், தங்களின் தொழில்வளம் சிறப்பாக இருக்கும். ஆயினும், பொருளாதாரத்தில் அகலக்கால வைக்காமல், சீராக இருக்கவும். தங்களின் தொழில் வளம் சிறக்க, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு நல்ல வேலை கிடைக்குமா? கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்? – எஸ். ஹேமலதா, சென்னை.
அன்பு நிலாச்சாரல் வாசகி ஹேமலதா அவர்களே!
18 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் மேஷம். தங்களின் ஜாதகத்தில் 6-ம் வீட்டில், குருவும், செவ்வாயும் இணைந்திருப்பதால், தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கியத்தை நல்கும் 9-ம் இடத்தை சுக்ரன் பார்ப்பதால், தங்களின் மண வாழ்வு நன்றாக இருக்கும். தங்களின் விருப்பங்கள் நிறைவேற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“