என் திருமணம் எப்போது நடக்கும்? – ஷோபனா, சென்னை.
அன்பு நிலாச்சாரல் வாசகி ஷோபனா அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். லக்னம் துலாம். தங்களின் ஜாதகத்தில் திருமண பாக்கியத்தை நல்கும் குரு 8-ல் மறைந்துள்ளதால், வியாழக்கிழமை தோறும், குருவை வழிபட்டு நெய்விளக்கேற்றி வரவும். ஜுன் 2012க்குள் திருமணம் கைக்கூடிவிடும். தங்களின் விருப்பம் நிறைவேற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு நிரந்தர வேலை கிடைக்குமா? – என். விஜயசந்தர், கரூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் விஜயசந்தர் அவர்களே!
36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம் மற்றும் லக்னமும் சிம்மம். தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து வரவும். தங்களின் ஜாதகப்படி கோசார குரு, 2012 மே மாதம் தங்களின் 9-ம் இடத்தில் உள்ளார். எனவே இந்த காலக் கட்டத்திற்குள் தங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். விரைவில் நிரந்தர வேலை கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“