எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எனக்கு திருமண வாழ்க்கை எப்போது அமையும் மற்றும் எப்படி இருக்கும்? – ஸ்வர்ணா, ஸ்ரீலங்கா
அன்பு நிலாச்சாரல் வாசகி ஸ்வர்ணா அவர்களே !
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு 7-ம் இடத்தில் இருப்பதால் தங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2011 மார்ச் 2-ம் வாரத்திற்குள் தங்களுக்கு வேலை கிடைத்து விடும். தாங்கள் செவ்வாய்க் கிழமை தோறும் செவ்வாயின் அம்சம் பெற்ற முருகனை வழிபட்டு வரவும். தங்களின் திருமணம் ஆகஸ்ட் 2011க்குள் கைகூடி விடும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு உடம்பில் கட்டிகளும், தோல்நோயும் உள்ளது. எனது திருமண வாழ்க்கை நன்றாக அமையுமா? – கே.கஜேந்திரன், விழுப்புரம்
அன்பு நிலாச்சாரல் வாசகர் கஜேந்திரன் அவர்களே !
39 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் தோல் நோயும், கட்டிகளும் நீங்க, வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று, முருகனை வழிபட்டு உப்பும், மிளகும் வாங்கிப் போடவும். த ங்களின் ஜாதகத்தில் 7-ல் சுக்ரன் இருப்பதால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களின் தோல் நோய் நீங்கவும், வளமான வாழ்க்கை அமையவும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்
பதில் அளித்தவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எனக்கு திருமண வாழ்க்கை எப்போது அமையும் மற்றும் எப்படி இருக்கும்? –