குருஜி, என் மகனின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவன் எதிர்காலம் எப்படி இருக்கிறது? அவன் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டான். அவனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? – ஈஸ்வரி, பாரிஸ், பிரான்ஸ்
அன்புடையீர், வணக்கம். தங்களது மகனின் ஜாதகப்படி தற்போது வயது 25 நடக்கிறது. லக்கினம் – விருச்சிகம், நட்சத்திரம் -ரேவதி, ராசி – மீனம். 2க்கு உடைய கல்வி ஸ்தான அதிபன் குரு கேதுவுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் கல்வியில் இடையில் தடை ஏற்பட்டு, பாதியில் நின்று விட்டது.
5ல் சந்திரன் அமர்ந்து 5ம் இடத்தைக் குரு பார்ப்பதால் மிகவும் நல்ல எதிர் காலம் உள்ளது. முன் கோபத்தைக் குறைக்கச் சொல்லவும். 10ம் இடத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் சம்பந்தப்பட்டுள்ளதால் தங்களை விட்டு நீங்கி வேறிடத்தில் வேலை கிடைக்கும். 2008 பிப்ரவரிக்கு மேல் நிரந்தர வேலை கிடைக்கும்.
லக்கினத்தில் கேதுவும், 7ல் ராகுவும் அமர்ந்துள்ளதால் சர்ப்ப தோசம் உள்ளது. எனவே காரியத்தடை, மனக்கிலேசம், நிரந்தர வேலை இன்மை முதலியன ஏற்படுகின்றன. இவைகள் நீங்கிட வெள்ளிக் கிழமையில் அம்மன் வழிபாடு செய்து வரவும். வலது கையில் முத்து மோதிரம் அணிந்து கொள்ளவும்.”