அன்பு வாசக உள்ளங்களுக்கு,
வாழ்க்கை இலகுவாக இருப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வி ஓடாத மனிதரே இல்லை எனலாம். உடல் நலம் என்பதற்கு மட்டுமான முக்கியத்துவம் இன்று மாறி வாழ்வு நலம் என்று விரிவடைந்திருப்பது இதற்கு நல்ல சான்று.
யோகா, தியானம், ஆயுர்வேதா போன்ற பல்வேறு கீழை நாட்டு நல்வாழ்வு முறைகளை மேலை நாட்டினர் வெகுவாகப் பயன்படுத்திப் பயன்பெறும் அதே நேரத்தில் மேலை நாட்டிலும் புதுப் புது வழி முறைகள் தோன்றாமலில்லை.
கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வரும் நிலாச்சாரலின் ஆசிரியர் நிலா இப்படிப்பட்ட 30க்கும் மேலான சுகமளிக்கும் வழிமுறைகளை அறிந்தவர். தாம் அறிந்தவற்றை இணையம் வழியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தம் எழுத்து மூலமாகப் பரப்பிவருவதோடு நேரடி வகுப்புகளும் நடத்தி வருகிறார். நிலாச்சாரலை தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசகர்கள் இவற்றை அறிந்திருக்கலாம்.
வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் இருக்கும் தடைகளை அகற்றி, இலகுவான வாழ்வு வாழ, இத்தகைய சுகமளிக்கும் உத்திகளின் பங்கு மகத்தானதாக இருக்கும். தற்போது உலகச் சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலா, இந்தப் பயணத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கித் தந்திருப்பதே தான் கற்றிருக்கும் வழிமுறைகள்தாம் என தெரிவிக்கிறார்.
மேலும் பல சுவாரசியமான தகவல்களையும், ஆச்சரியமான அனுபவங்களையும் ஜெயா டிவி வாயிலாக நம்மிடையே சுவைபட பகிர்ந்து கொள்கிறார் நிலா. அனைவரும் காணத் தவறாதீர்கள்.
ஒளிபரப்பு விவரங்கள் :
நாள் : 30.1.2013, புதன்கிழமை
நேரம் : காலை 8.15 மணி
ஊடகம் : ஜெயா டிவி
நிகழ்ச்சி : காலைமலர்