தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 250 கிராம்,
உருளைக்கிழங்கு – 250 கிராம்,
பச்சை மிளகய் – ஏழெட்டு,
கொத்துமல்லித்தழை, புதினா – சிறு சிறு கட்டுகள்,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து விடவும். உருளைகிழங்கை வேக வைத்து மேல் தோலை உரித்து விட்டு மசித்து வைக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினா, கொத்துமல்லித் தழையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து பிசைந்து எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடை போல தட்டியோ காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்.மிகவும் சுவையான ஜவ்வ ரிசி வடைகள் தயார்.
இவற்றோடு பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருஞ்சீரகம் ஆகியவற்றைக் கலந்து செய்தால் ஜவ்வரிசி மசால் வடை ரெடி!!
“